Alaioli
UPSI, வளர்தமிழ் மன்றத்தின் நாடகச்சுடர் 2026



சுல்தான் இதுரீசு  கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் பெருமைமிகு  "நாடகச்சுடர்” மேடை நாடகப் போட்டியானது கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களின் படைப்பாற்றலையும்  கலைத்திறமைகளையும் வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக இருந்து வருகிறது.

இவ்வாண்டிற்கான நாடகச்சுடர் போட்டி 23 மே 2026 அன்று, "உப்சி" திரையரங்குச் சோதனை மேடை அரங்கில் (Panggung Percubaan)  நடைபெறவுள்ளது. தேசிய அளவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் IPTA, IPTS, IPG, POLITEKNIK ஆகிய உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

இப்போட்டியானது சமூகவியல் திருக்குறள் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வையும் சிந்தனையையும் கலைவடிவில் வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெறும் போட்டி மட்டுமல்லாது, தமிழ் இலக்கியமும் நாடகக் கலையும் இணையும்  ஓர் அரிய அனுபவமாக அமையவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும்.

போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பார்வையாளர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  மேல் விவரங்களுக்கு :

VANITHA NAGARAJAN (இயக்குநர்) - 011-51687845 அவர்களுக்குத் தொடர்புக் கொள்ளலாம்.

Leave a Comment
Trending News