Alaioli
நேற்றிரவு பத்து பகாட் பக்காத்தான் ஹாராப்பான் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை பாப்பா ராய்டு பார்வையிட்டார்.

 எஸ்.எஸ்.மணிமாறன்.

பத்து பகாட் ஜூன் 7. நேற்றிரவு  பத்து பகாட்டில் அமைக்கப் பட்டுள்ள பக்காத்தான் ஹாராப்பான் ஜொகூர் மாநிலத் தேர்தல் நடவடிக்கை அறையை நேரில் சென்று பார்வையிட்ட மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த அதிகாரிகளிடம் இது குறித்து கூடுதலாக விளக்கமும் கேட்டறிந்தார்.


சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் சேவையாற்றி வரும் அவரது சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி, பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் மற்றும் முக்கிய சில அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஜொகூர் மாநில அளவில் மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் மாநில த் தேர்தல் தொடர்பான கருத்துகளையும் வாக்காளர்கள் மூலம் தாம் அறிய வந்ததாக பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடக்கமாக அதே வேளையில் மக்கள் நலம் கருதி மிகுந்த பாதுகாப்புடன் ஜொகூர் மாநிலத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் குறிப்பிட்டார். அதே வேளையில், பெரும்பான்மையில் பக்காத்தான் ஹாராப்பான் மாநில தேர்தலில் வெற்றி வாகைச் சூடி வர வேண்டும் என்ற நம்பிக்கையை தாம் வைத்திருப்பதாக அவர் கூறினார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News