Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே, 22- நூறாண்டுகள் பழைமையான பந்திங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் 68 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா இரத ஊர்வலம் மற்றும் பல் வேறு சிறப்பு வைபவங்களுடன் ஆலய நிர்வாகத்தினரின் ஒருமித்த பேராதரவுடன் 30.5.2026 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பந்திங் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால் குட ஊர்வலம் மாரியம்மன் ஆலயம் வரை நடைபெறும் என்று ஆலயத் தலைவர் கே.குமார் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அன்றைய தினம் இரவு 7 மணி தொடக்கம் அம்பிகை அலங்கார ரூபிணியாய் இரதத்தில் அமர்ந்து திருஉலா வந்து தாமான் செரி புத்ரா தோமான் மக்கள் குடியிருப்புப்பகுதி பக்தர்களுக்கு அருட் காட்சி தருவார் என்று குமார் அலை ஒளியிடம் கூறினார். மேலும், 21.5.2026 தொடங்கி 31.5.2026 வரை உபய அன்பர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஆலயத்தில் இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.-Alaiolinews
உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!