Alaioli
பிஜிஆர்எம் இளம் வீராங்கனை 2-இரண்டாம் ஆண்டு பெர்ல் தைக்குவாண்டோ சாம்பியன்ஷிப்  2026- போட்டியில்  தோங் பிக் ஆஃன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

சத்யா பிரான்சிஸ்

பினாங்கு, மே 23 -பிஜிஆர்எம் இளம் வீராங்கனை 2-இரண்டாம் ஆண்டு பெர்ல் தைக்குவாண்டோ சாம்பியன்ஷிப்  2026- போட்டி ஏற்பாட்டு பினாங்கில் சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து திறமையான இளம் தைக்குவாண்டோ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டனர்.


இந்தப் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், மாஸ்டர் துங்  அவர்களின் பயிற்சியில் செயல்படும் ஈகாங் தைக்குவாண்டோ கிளப்-ஐ சேர்ந்த தோங் பிக் ஆஃன் ஆவார். ரெட் பெல்ட் இரண்டாம் நிலை (Red Belt Second Grade)தரத்தைப் பெற்றுள்ள இவர், பூம்சே இவண்ட்  தனிப்பட்ட பெண்கள் (Poomsae Event – Individual Female Below 30 )பிரிவில் சிறப்பாகப் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்று தனது  பிஜிஆர்.எம். கழகத்திற்கும்( Persatuan Gabungan Rangkaian Masyarakat) அமைப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தைக்குவாண்டோ போட்டித் துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள எடுத்த அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும்.


இதனிடையே, பிஜிஆர்எம் ( Persatuan Gabungan Rangkaian Masyarakat)  தலைவர் Dr. முகமது கமால் மற்றும் PGRM செயலாளர் குகனேஸ்வரி செங்கல்ராயன் ஆகியோர், விளையாட்டு, தனிமனித மேம்பாடு மற்றும் இளைஞர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றனர்.


அவர்களின் கருத்துப்படி, தைக்குவாண்டோ போன்ற விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபடுவது ஒழுக்கத்தை உருவாக்குவதோடு, மனத் திடத்தை வளர்த்து, போராட்டமிக்க மனப்பான்மையை உருவாக்குகிறது.


“இத்தகைய போட்டிகளில் பங்கேற்பது வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல; அது தன்னம்பிக்கை, போட்டித் திறன் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கும் ஒரு சிறந்த தளமாகும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.


எதிர்காலத்தில் திறமையான, ஒழுக்கமிக்க, தன்னம்பிக்கையுள்ள மற்றும் உயர்ந்த நிலைகளில் போட்டியிடக் கூடிய இளைஞர் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், பல்வேறு விளையாட்டு மற்றும் தனிமனித மேம்பாட்டு துறைகளில் மேலும் அதிகமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என PGRM நம்பிக்கை கொண்டுள்ளது என தெரிவித்தனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News