Alaioli
ஐபிஎப் சிவா என்று அழைக்கப்படும் திரு.முருகன் பெருமாள் காலமானார்

அன்பு உடன்பிறப்புகளே தோழர்களே ஒரு கனத்த இதயத்துடன் இந்த இரங்கல் செய்தியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் நம்மோடு நம்முடைய ஐபிஎப் கட்சியின் போராட்டங்களில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு டான் ஸ்ரீ அண்ணன் டத்தோ எம் ஜி பண்டிதன், டத்தோ சம்பந்தன் அவர்களின் பாச அறையில் வளர்ந்து தனது இறுதி மூச்சு வரை ஐபிஎப் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட ஒரு உண்மையான ஐபிஎப் உடன்பிறப்பு 'கேளான ஜெயா'


ஐபிஎப் சிவா என்று அழைக்கப்படும் திரு.முருகன் பெருமாள் அவர்கள் நேற்று இரவோடு 5-6-2026 நம்மை விட்டு பிரிந்தார் என்ற துயர செய்தியை கேட்டு ஒரு கணம் நான் நிலைகுலைந்து போனேன். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடைசி மூச்சு வரை ஐபிஎப்பின் தொண்டனாகவே இருந்தவர் சிவா என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அண்ணாரைப் பிரிந்து பெரும் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் ஐபிஎப் உடன்பிறப்புகளுக்கும் கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் என்னுடைய இரங்கலையை தெரிவித்துக் கொள்கிறேன் 


 டத்தோ லோகநாதன் 

 ஐபிஎப் தேசியத் தலைவர்


உ சிவமயம்  

ஓம் நமசிவாய


திரு முருகன் பெருமாள்  

பிறந்த தேதி: 13 ஜூன் 1965  

மறைந்த தேதி: 5 ஜூன் 2026


ஈமச் சடங்கு விவரம்:  

தேதி: 7 ஜூன் 2026, ஞாயிறு  

நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  

இடம்: B2-2-50, Block 2, Jalan PJS 6/5H,  

தேசா மெந்தாரி, 46000 பெட்டாலிங் ஜெயா


தகனம்: பூச்சோங் BT 14


தொடர்புக்கு:  

0104407151 செலன்  

0146248703 தினா


ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தி அடையட்டும்

Leave a Comment
Trending News