Alaioli
ஜெஞ்ஜாரோம் கிராமத்தின் நூறாண்டு நிறைவு விழாவுக்கு துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஷாஹிட் ஹமிடி சிறப்பு வருகை

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங் ஜூன் 7.  இங்கு, பந்திங் நகரை யொட்டி அமைந்துள்ள ஜெஞ்ஜாரோம் கிராமத்தின் நூறாண்டு நிறைவை யொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கம்போங் ஜெஞ்ஜாரோம் பூர்த்தி நிறைவு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிட நாட்டின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஷாஹிட் ஹமிடி சிறப்பு வருகை மேற்கொண்டார்.  


நேற்று 6.6.2026 இல் கம்போங் ஜெஞ்ஜாரோம் நூறாண்டு நிறைவு விழாவில் வாழ்த்துரை வழங்கிய அவர், கிராம மக்களின் வாழ்வாதாரம் வருமானம் தொழில் வளர்ச்சி மூலாதாரம் மாணவர்கள் கல்வி போன்ற விவரங்களை கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் மூலம் அறிந்து தமது உரையில் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.  


மேலும், கம்போங் ஜெஞ்ஜாரோம் பகுதியில் வசித்து வரும் 102 வயது நிரம்பிய சிலரையும் நிறைவு விழாவில் நேரில் சந்தித்து பேசிய துணைப் பிரதமர் அமாட் ஷாஹிட் ஹமிடி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளித்த அன்பளிப்பை மூத்த கிராமப் பெரியவர்களிடம் வழங்கி நல்லாசிப் பெற்றார்.  


ஜெஞ்ஜாரோம் கிராமத்தின் நூறாண்டு விழா வரலாறு படைத்தது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கோலலங்காட் ம இகா தொகுதி த் தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன் தமது கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் பதிவு செய்தார்.

Leave a Comment
Trending News