Alaioli
சிலாங்கூர் இந்திய குடியிருப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் வியாபாரிகளுக்கான உதவிதிட்டப் பதிவு

எஸ்.எஸ்.மணிமாறன்.

பெஸ்தாரி ஜெயா ஜூன் 7.  சிலாங்கூர் மாநில இந்திய குடியிருப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் வியாபாரிகளுக்கான பந்துவான் புளூபிரிண்ட் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தும் முறையான பதிவும் அதற்கான தெளிவான விளக்கமும் வரும் 13.6.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 வரை இங்கு பெஸ்தாரி ஜெயா தாமான் செரி இண்டா பாலாய் ராயா மண்டபத்தில் நடைபெற தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்காடி சிறு தொழில் செயற்குழு உறுப்பினரும் சிலாங்கூர் மாநில பெண்கள் நலச் சங்கத்தின் தலைவியுமான திருமதி ஜெகதீஸ்வரி வேலு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


அரசின் சிறு தொழில் திட்ட நடவடிக்கையில் தங்களைப் பதிவு செய்து கொள்ள நாட்டம் உடையோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உடன் அதற்கு தேவையான ஆவணங்களுடன் குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வந்து அதிகாரிகளைச் சந்திக்கும்படி அவர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment
Trending News