Alaioli
ஜெராம் குடியிருப்பாளர்களுக்கு நீண்ட காலமாக சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்த கோழிப்பண்ணைகள் நிரந்தரமாக மூடப் பட்டன.

எஸ்.எஸ்.மணிமாறன்  

கோல சிலாங்கூர். ஜூன்  7 கோல சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள ஜெராம் குடியிருப்பாளர்களுக்கு நீண்ட காலமாக பல்வேறு சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்த கோழிப் பண்ணைகள் நிரந்தரமாக இழுத்து மூடப் பட்டதோடு இனி பண்ணைகள் நடவடிக்கைகள் இப்பகுதியில் மீண்டும் தொடராது என்று சுகாதார இலாகா உயர் நிலை அதிகாரி டாக்டர் காசிம் இஸ்மாயில் செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தரவாதம் 


அளித்தார். வியாபார நோக்கில் இப்பகுதியில் சிலர் அத்துமீறி செயல் பட்டு வந்த கோழிப் பண்ணைகளில் வீசிய மோசமான துர் நாற்றம், ஈக்கள் படையெடுப்பு காரணமாக நிம்மதியாக ஒரு வேளை உணவைக் கூட எடுக்க முடியாமல் குடியிருப்பாளர்கள் பலரும் தொடர் புகார்களை அளித்து வந்துள்ளனர்.  இதன் எதிரொலியால், ஜெராம் ஜாலான் ராஜா அப்துல்லாவில் செயல்பட்டு வந்த கோழிப் பண்ணைகள் முற்றாக அகற்றப் பட்டு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக காசிம் இஸ்மாயில் விளக்கம் அளித்தார். கோழிப் பண்ணைகள் முற்றாக எடுக்கப் பட்டதால் ஈக்கள் படையெடுப்பு பிரச்சினை இனி இல்லாமல் போகும் என்று அவர் உறுதி அளித்தார்.

Leave a Comment
Trending News