Alaioli
உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக வெண்ணிலவன் பரந்தாமன் நியமனம்.

ஈப்போ,மார்ச்03: சித்தியவானைச் சேர்ந்த  வெண்ணிலவன் பரந்தாமன் தமிழ்மொழியில் தனது இளநிலைக் கல்வி பட்டபடிப்பை சிறப்பான தேர்ச்சியில் முடித்து, தற்போது மொழி, தொடர்பாடல் துறையில் முதுகலைக் கல்வி பட்டபடிப்பை உப்சி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். வெண்ணிலவன் பரந்தாமன் பேரா மாநில மஇகாவின் புத்ரா பிரிவின் தலைவரும் ஆவார். 


தலைமைத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுமார் ஒன்பது நாடுகளுக்குச் சென்று உலகலாவிய நிலையில் இளைஞர் மாநாடு, சிறப்பு சந்திப்பு,பட்டிமன்றம்,பன்னாட்டு கருத்தரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டு, பல விருதுகளையும் வென்றுள்ளார்


வணிகத்துறையிலும், தலைமைத்துவத்திலும் இந்திய இளைஞர்களோடு இணைந்து தானும் முன்னேற வேண்டும் என்பதே தன்னுடைய அவா என்பதையும் சொன்னார்

Leave a Comment
Trending News